--> -->

நிகழ்வுகள்

பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை இராணுவம் அபார வெற்றிகளுடன் சம்பியனாக தெரிவு

மஹரகம தேசிய இளைஞர் நிலையத்தில் மார்ச்11 முதல்13 வரை இலங்கை தேசிய வுஷூ கூட்டமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட 18வது தேசிய வுஷூ போட்டியின் சம்பியன்ஷிப் மற்றும் இலங்கை உயிர்காப்பு சங்கத்தினால் (SLASU) மார்ச்15 மற்றும்16 ஆம் திகதிகளில் கல்கிசை கடற்கரையில் நடத்தப்பட்ட 84வது டூ மைல் கடல் நீச்சல் சாம்பியன்ஷிப்பின் போட்டிகளில் இராணுவ போட்டியாளர்கள் போட்டியின் அனைத்து சம்பியன்ஷிப்பையும் பெற்றுக் கொண்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

விமானப்படையின் 25வது சைக்கிள் சவாரி கொழும்பில் இருந்து தொடங்குகிறது

இலங்கை விமானப்படையினர் 25வது தடவையாக ஏற்பாடு செய்துள்ள 'விமானப்படை சைக்கிள் சவாரி - 2024' நேற்று (மார்ச் 03) காலை காலிமுகத்திடலில் ஆரம்பமானது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மாலைதீவு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

மாலைதீவு பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அப்துல் ரஹீம் அப்துல் லத்தீப் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

தென் சூடான் 9வது இலங்கை பாதுகாப்பு குழு நாடு திரும்பல்

தென் சூடான் நிலை - 02 மருத்துவமனையில் தங்கள் சேவைக் காலத்தை நிறைவு செய்துள்ள 9வது இலங்கைப் மருத்துவக் குழுவின் 09 அதிகாரிகள் மற்றும் 43 படையினர் (பெப்ரவரி 05) காலை நாடு திரும்பினர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கலேவெல பொது மைதானம் இராணுவத்தினரால் மாற்றியமைப்பு

கலேவெலயில் புனரமைக்கப்பட்ட பொது விளையாட்டு மைதானம் 21 ஜனவரி 2024 ம் திகதியன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கௌரவ ஜானக பண்டார தென்னகோன், மற்றும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ ஆகியோர் கலந்துகொண்டனர்.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

ஜப்பானிய அமைச்சரை இராஜாங்க அமைச்சர் தென்னகோன் பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வழியனுப்பி வைத்தார்

இலங்கைக்கான  உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக் கொண்டு நாடுதிரும்பும் ஜப்பானின் நிதியமைச்சரும், நிதிச் சேவைகள் இராஜாங்க அமைச்சரும், நிதி துஷ்பிரயோகத்திற்கு பொறுப்பான அமைச்சருமான திரு. சுசுகி ஷுனிச்சி  அவைகளை இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் உத்தியோகபூர்வமாக நேற்று (ஜனவரி 12) வழியனுப்பி வைத்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை
இளங்கலை பாடநெறிகளுக்கு பதிவு செய்துள்ளது

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2023/2024 கல்வியாண்டிற்கான இளங்கலை பட்டப்படிப்பு திட்டங்களுக்கு வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு தகுதிகளை பெற்ற மாணவர்களை பதிவு செய்துள்ளது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

சர்வதேச ஓபன் டேக்வாண்டோ ஆசிய சாம்பியன்ஷிப்பில் பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவர்கள் சிறந்த வெற்றிகளைப் பெற்றுள்ளனர்

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற சர்வதேச ஓபன் டேக்வாண்டோ ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில், கொழும்பு பாதுகாப்பு சேவைகள் கல்லூரி மாணவர்கள் ஒரு தங்கப் பதக்கத்தையும் மூன்று வெண்கலப் பதக்கங்களையும் வென்றுள்ளனர்.




பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இந்திய தூதரக புதிய உதவி பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மன்தீப் சிங் நேகி இன்று (டிசம்பர் 20) பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

நாடு திரும்பும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

இலங்கையில் தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் இயன் கெய்ன் இன்று (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

நாடு திரும்பும் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்

தனது பதவிக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்க்கி (ஓய்வு) இன்று (டிசம்பர் 13) கோட்டே ஸ்ரீ ஜெயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.



பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை உயர் மட்டத்தை நோக்கிய நம்பிக்கையான பயணத்தில் உள்ளது - பாதுகாப்பு செயலாளர்

இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் எமது ஆயுதப் படைகள் முக்கியப் பங்காற்றியுள்ளன. இந்த நாட்டின் வரலாற்றில் கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களாக நீடித்த கொடூரமான பயங்கரவாத அமைப்புக்கு எதிரான போராட்டத்தில், வெற்றிகரமான இராணுவத் தலைமைகளிலும் சில சமயங்களில் போர்க்களத்தில் பலவீனமான சூழ்நிலைகளிலும் பல அனுபவங்களை பெற்றுள்ளோம்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மெட்டா நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் இராஜாங்க அமைச்சரை சந்தித்தார்

மெட்டா நிறுவனத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான பொதுக் கொள்கை தொடர்பான பணிப்பாளர் சரிம் அஸீஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை இன்று (டிசம்பர் 07) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இராணுவத்தினரால் வடக்கில் சமூக வேலைத்திட்டங்கள் முன்னெடுப்பு

இலங்கை இராணுவத்தின் யாழ். 4வது இலங்கை இராணுவ மருத்துவப் படையனியின் 16வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அதன் முகாம் வளாகத்தில் இரத்ததானம் வழங்கும் நிகழ்வினை மேற்கொண்டனர்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கைக்கான செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

இலங்கைக்கான செஞ்சிலுவை சங்கத்தின் (ICRC) தலைவி செவரீன் ஷப்பாஸ் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

மத்திய பாதுகாப்பு படையினரால் ஓயியவில் ரயில் பாதை சீரமைப்பு

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 22) காலை கொழும்பில் இருந்து பதுளை வரை செல்லும் மலையக ரயில் பாதை ஓயியவில் புகையிரத நிலையத்திற்கு அருகில் மண் சரிவு காரணமாக தடைப்பட்டது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

புதிதாக நியமிக்கப்பட்ட இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார். இந்த சந்திப்பு ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (நவம்பர் 14) இடம்பெற்றது.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மேலும் வலுப்படுத்தப்படும்

இலங்கைக்கான தென்னாபிரிக்கத் தூதுவர் அதிமேதகு சாண்டில் எட்வின் ஷால்க், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.


பாதுகாப்பு செய்திகள் | பாதுகாப்பு செய்திகள்

அமெரிக்க பசிபிக் சிறப்பு நடவடிக்கைக்
கட்டளைத் தளபதி பாதுகாப்புச் செயலாளரை சந்தித்தார்

இலங்கை வந்துள்ள அமெரிக்க பசிபிக் சிறப்பு நடவடிக்கைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ஜெரோமி பி வில்லியம்ஸ் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.