--> -->

ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வு) WWV RWP RSP USP ndc psc MPhill

செயலாளர், பாதுகாப்பு அமைச்சு மற்றும்
செயலாளர், தேசிய பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சு

35 ஆண்டுகளுக்கும் மேலான சிறப்பான இராணுவ சேவைக் காலத்தைக் கொண்டவரும் பாதுகாப்பு மற்றும் சிவில் - இராணுவ ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அனைத்து துறைகளிலும் பல முக்கிய நியமனங்களை வகித்தவருமான ஜெனரல் (ஒய்வு) ஜிடிஎச்கே குணரத்ன அவர்கள் 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் திகதி பாதுகாப்பு செயலாளராக தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சிறப்பான இராணுவ வரலாற்றைக் கொண்ட அவர், 2015ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை இராணுவ தலைமையகத்தின் யுத்த தளவாட மாஸ்டர் ஜெனரலாக கடமையாற்றினார். 2008ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2009ம் ஆண்டு ஜூலை வரை 53வது பிரிவின் பொதுக்கட்டளை அதிகாரியாக கடமையாற்றிய ஜெனரல் குணரத்ன அவர்கள், 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி அன்று தமிழீழ விடுதலைப் புலிகளின் 30 ஆண்டுகால பயங்கரவாதத்தை முற்றிலுமாக அழித்த நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதி கட்ட மனிதாபிமான நடவடிக்கையின் போது படைகளுக்கு கட்டளை வழங்கிய முக்கிய தளபதிகளில் ஒருவராவார்.

ஜெனரல் குணரத்ன அவர்கள், 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை பிரேசிலின் பிரதி தூதுவராக கடமையாற்றினார்.

2016ம் ஆண்டு இராணுவச் சேவையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், தனியார் துறையில் உயர் பதவிகளை வகித்த அவர், தனது 35 வருட கால இராணுவ அனுபவத்தைக் கொண்டு பல புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ஆரம்ப வாழ்க்கை

பன்னிபிட்டிய தர்மபால வித்தியாலயம் மற்றும் கொழும்பு, ஆனந்தா கல்லூரி ஆகிவற்றின் பழைய மாணவரான ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள், 1981ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கெடட் அதிகாரியாக இலங்கை இராணுவத்தில் இணைந்து கொண்டார். அடிப்படை இராணுவப் பயிற்சி மற்றும் கமாண்டோ பாடநெறியை பூர்த்தி செய்த பின்னர், 1982ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரஜரட்ட ரைபிள்ஸின் இரண்டாம் லெப்டினனாக நியமிக்கப்பட்டார். ரஜரட்ட ரைஃபிள்ஸ் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட கஜபா படையணியின் ஆரம்ப அதிகாரிகளில் இவரும் ஒருவர். அவர் கஜபா படையணியின் பிளட்டூன் கொமாண்டராகவும், கொம்பெனி கமாண்டராகவும் பணியாற்றினார், பின்னர் அவர், லெப்டினன் ஆகவும் தொடர்ந்து கெப்டன் ஆகவும் தரம் உயர்த்தப்பட்டார்.

1987ம் ஆண்டு இடம்பெற்ற வடமாராட்சி நடவடிக்கையில் அவர் பங்கேற்றார். 1990 ஆம் ஆண்டு மான்குளம் இராணுவ முகாம் புலிகளின் தாக்குதலுக்கு உள்ளான வேளையில் அவர் இம் முகாமின் பொறுப்பதிகாரி இருந்தார். அதே ஆண்டில், அவர் மேஜர் தரத்திற்கு பதவிக்கு உயர்த்தப்பட்ட பின்னர் கஜபா ரெஜிமென்டினது 6வது படையணியின் இரண்டாம் நிலை கட்டளையதிகாரியாக நியமிக்கப்பட்டார். 6வது கஜபா ரெஜிமென்டில் வலுவூட்டல் பணிமாற்றம் பெறுவதற்கு முன்னர் ஓய்வுபெற்ற ஜெனரல் குணரத்ன அவர்கள் விடுதலைப் புலிகளினால் பல நாட்கள் முற்றுகைக்குள்ளாக்கப்பட்டு படையினரின் எதிர் தாக்குதலின் பின்னர் விடுவிக்கப்பட்ட சிலாவத்துரை இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்.போர்களமுனை கடமைகளில் இருந்து திரும்பிய பின்னர், இராணுவத் தலைமையகத்தின் லொஜிஸ்டிக் பணியகத்தின் இரண்டாம் தர பதவிநிலை அதிகாரியாக அவர் இடமாற்றம் பெற்றார்.

1994ம் ஆண்டில் லெப்டினென்ட் கேணலாக தரமுயர்த்தப்பட்ட அவர், ரிவிரச படை நடவடிக்கையில் ஈடுபட்ட 6வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார். பின்னர் அவர் ஒன்றிணைந்த சேவை படை நடவடிக்கை தலைமையகத்தில் ஜயசிக்குறு படை நடவடிக்கையை ஒருங்கிணைப்பு செய்யும் முதலாம் தர பதவிநிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

2008ம் ஆண்டு 53வது பிரிவின் பொது கட்டளை அதிகாரி எனும் வகையில் அவரது இராணுவ சேவைக்காலத்தில், விடுதலைப் புலிகளின் தலைவர் – வேலுப்பிள்ளை பிரபாகரனை கொலை செய்ததன் மூலம் புலி பயங்கரவாதத்தினை நாட்டிலிருந்து அகற்றுவதற்கு தனது படையணியினரை வழிநடத்திச் சென்றார்.

மேலும் அவர், 53வது பிரிவிற்கு கட்டளை வழங்கியதுடன் 55வது பிரிவு மற்றும் விஷேட படையனியின் கேணல் ஒப் தி ரெஜிமென்ட் ஆகவும் கஜபா படையணி மற்றும் கவச வாகன படையணி ஆகியற்றை மேற்பார்வை செய்யும் உயரதிகாரியாகவும் கடமையாற்றினார்.

ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் , போர்க்களத்தில் தனது வீரதீரச் செயல்களுக்காக பல்வேறு வீர விருதுகள், சேவைகளுக்கான பதக்கங்கள், மற்றும் கள நடவடிக்கை பதக்கங்கள் ஆகியவற்றை பெற்றுக்கொண்டார். அவர் தனது சிறப்பான இராணுவ சேவைக்காக கீழ் வரும் பதக்கங்களை பெற்றுக்கொண்டார்.


வீர விருதுகள் :

 • வீர விக்கிரம விபூஷணய - ஒரு உயர் ஒழுங்கு இராணுவத் தன்மையின் துணிச்சலான மற்றும் வெளிப்படையான துணிச்சலுக்கான தனிப்பட்ட செயல்களுக்காக, சக வீரர்களின் உயிரைப் பாதுகாக்கும் அல்லது செயல்பாட்டு நோக்கத்தை எளிதாக்கும் நோக்கத்துடன் தனது சொந்த பாதுகாப்பைப் பொருட்படுத்தாமல் தானாக முன்வந்து செயல்பட்டதற்காக வழங்கப்படும் விருது
 • ரண விக்ரம பதக்கம - எதிரியை வீரத்துடன் நேருக்கு நேர் எதிர் கொண்டதற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த துணிச்சளுக்கான விருது.
 • ரண சூர பதக்கம- எதிரியை எதிர் கொண்டதற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த துணிச்சலான விருது.

சேவைப் பதக்கங்கள் :

 • உத்தம சேவ பதக்கம- பதக்கம - கறைபடாத, முன்மாதிரியான நடத்தைகளுக்காக வழங்கப்படும் பதக்கம் .
 • தேச புத்ர சம்மாணய- எதிரி நடவடிக்கையின் போது காயம் பட்டவர்கள் மற்றும் அல்லது எதிரி நடவடிக்கையின் விளைவுகளால் உயிரிழந்த வீரர்களுக்காக வழங்கப்படும் பதக்கம்

போர்க்கள பதக்கங்கள் :

 • கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பதக்கம் - இலங்கையின் கிழக்குப் பிராந்தியத்தை விடுவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மனிதாபிமான செயற்பாட்டில் பங்கேற்றவர்கள்.
 • வடக்கு மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான பதக்கம் - இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தை விடுவிப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு மனிதாபிமான செயற்பாட்டில் பங்கேற்றவர்கள்.
 • பூர்ண பூமி பதக்கம- 6 மாதங்களுக்கும் மேலாக வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் சேவையாற்றியதற்காக வழங்கப்படும் பதக்கம்
 • வட கிழக்கு நடவடிக்கைகளுக்கான பதக்கம் - 1983 ஜூலை 23 முதல் 3 வருட காலம் வரை யுத்த பிரதேசத்தில் சேவையாற்றியதற்காக வழங்கப்படும் பதக்கம்
 • வடமாராட்சி நடவடிக்கை பதக்கம்– வடமாராட்சி படைநடவடிக்கையில் பங்குபற்றியமைக்காக வழங்கப்படும் பதக்கம்
 • ரிவிரச நடவடிக்கை பதக்கம் - 17 ஒக்டோபர் 1995 முதல் 6 டிசம்பர் 1995 வரையிலான காலகட்டத்தில், படை நடவடிக்கையில் ஈடுபட்ட அனைத்து ராணுவ வீரர்களுக்கும் வழங்கப்படும் பதக்கம்

சேவைப் பதக்கங்கள் :

 • 50 ஆவது சுதந்திர தினவிழா நினைவுப் பதக்கம்
 • இலங்கை இராணுவத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவு பதக்கம்
 • இலங்கை படைப்பிரிவில் நீண்ட பணிப் பதக்கம்

ஓய்வுபெற்ற ஜெனரல் குணரத்னஅவர்கள் துருக்கியில் சிவில் இராணுவ ஒருங்கிணைப்பில் சிறப்புப் பயிற்சி பெற்றுகொண்டதுடன் வெளிநாடுகளில் இடம்பெற்ற பின்வரும் பயிற்சிகளிளும் கலந்துகொண்டார்:

 • இளம் காலாட்படை அதிகாரிகள் பயிற்சி-காலாட்படை மற்றும் போர்த்தந்திர பயிற்சிப் பாடசாலை, பாகிஸ்தான் (1988)
 • கனிஷ்ட கட்டளை பயிற்சி நெறி-போரியல் கல்லூரி, இந்தியா (1990)
 • சிரேஷ்ட கட்டளை பயிற்சி நெறி-போரியல் கல்லூரி, இந்தியா (1999)
 • கட்டளை மற்றும் பதவிநிலை பயிற்சி நெறி-இராணுவ கட்டளை மற்றும் பதவிநிலை கல்லூரி, பாகிஸ்தான் (2000)
 • பாதுகாப்பு மற்றும் மூலோபாய கற்கை நெறி-தேசிய பாதுகாப்புக் கல்லூரி, இந்தியா (2011) மேலும் அவர் வெளிநாடுகளில் நடைபெற்ற கீழ்வரும் மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் ஆகியவற்றில் கலந்துகொண்டார்:
 • எல்லைப் பாதுகாப்பு தொடர்பான கிழக்கு மற்றும் தெற்காசிய மாநாடு – வாஷிங்டன் டிசி மற்றும் நியூ மெக்சிகோ, அமெரிக்கா (2002)
 • மரணத்தை ஏற்படுத்தாத ஆயுதங்கள் தொடர்பான கருத்தரங்கு – போர்ட் டிக்ஸன், மலேசியா (2008)
 • களமுனை போர் பயிற்சி –மொங்கோலியா, சீனா (2008)
 • டோக்கியோ பாதுகாப்பு மாநாடு – ஜப்பான் (2008)
 • ஆசியா பசிபிக் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மாநாடு, சிங்கப்பூர் (2009)
 • மனிதாபிமான டெமிங் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் திட்டம்-வாஷிங்டன் டிசி, அமெரிக்கா (2010)
 • இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் இருந்து கஜகஸ்தான் நோக்கி செல்லும் மூலோபாய சுற்றுப் பயணம் (2011)
 • உலக இராணுவ விளையாட்டுகளுக்கான தூதுக் குழு உப தலைவர் – கொரியா குடியரசு (2015)
 • ஒருங்கிணைந்த பாதுகாப்பு மாநாடு-மொஸ்கோ, ரஷ்யா (2016)

ஓய்வுபெற்ற ஜெனரல் குணரத்ன அவர்கள் , பின்வரும் நூல்களின் நூலாசிரியர் ஆவார்.

 • 'ரோட்டு டு நந்திக்கடல்' – சிங்களம் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்பு.
 • ‘කඩොල් ඇත්තු’
 • 'கடோல் எத்து '
 • 'உதார தேவி'
 • ‘கோட்டாபய’

ஜெனரல் குணரத்ன அவர்கள் சித்ராணி குணரத்ன அவர்களை திருமணம் செய்ததுடன் அவர்களுக்கு புதல்வி ஒருவரும் உள்ளார்.