செய்திகள்
திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை பாதுகாப்பு பிரதி அமைச்சர் பார்வையிட்டார்
இலங்கை கடற்படையினரால் (SLN) கைப்பற்றப்பட்ட ஒரு தொகை போதைப்பொருட்களை பார்வையிடுவதற்கு பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (மே 28) திக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு விஜயம் செய்தார்.
எகிப்திய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கைக்கான எகிப்து அரபுக் குடியரசின் தூதுவர் அதிமேதகு அடெல் இப்ராஹிம், இன்று (மே 27) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்தோனேசிய உயர் ஸ்தானிகர் பாதுகாப்பு பிரதி அமைச்சரை சந்தித்தார்
இந்தோனேசிய உயர் ஸ்தானிகர் அதிமேதகு திருமதி. தேவி குஸ்டினா டோபிங், இன்று (மே 27) பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) அவர்களை கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
தேசிய நீர்வரைவியலாளர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கையின் தேசிய நீர்வரைவியலாளர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, திங்கட்கிழமை (மே 26) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் உறுப்பினர்கள் தேசிய போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்
சர்வதேச இராணுவ விளையாட்டு அமைப்பின் 80வது பொதுச் சபை மற்றும் மாநாடு இலங்கை பாதுகாப்பு சேவைகள் விளையாட்டு வாரியத்தின் அனுசரணையில் 2025 மே 19 முதல் கொழும்பில் நடைபெறுவதுடன், இதற்கு இணையாக மாநாட்டில் பங்கேற்ற ஆப்பிரிக்கா, அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இராணுவ வீரர்கள் 2025 மே 20 அன்று பத்தரமுல்ல போர் வீரர்கள் நினைவுச்சின்னத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
80வது CISM பொதுச் சபை மற்றும் மாநாடு நிறைவடைந்தது
இன்று (மே 23) கொழுபு கிராண்ட் மேட்லண்ட ஹோட்டலில் நடைபெற்ற 80வது CISM பொதுச் சபை மற்றும் மாநாட்டின் நிறைவு விழாவிற்கு பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் தூயகொந்தா தலைமை தாங்கினார்.
7வது சர்வதேச பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான கற்கை பாடநெறி
வெற்றிகரமாக நிறைவடைந்தது
7வது சர்வதேச பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான கற்கை பாடநெறி நேற்று (மே 21) ஜெனரல் ஜொன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக (KDU) கேட்போர் கூடத்தில் நடைபெற்ற நிறைவு விழாவுடன் சிறப்பாக நிறைவடைந்தது. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சுவிஸ் தூதுவர் மேதகு கலாநிதி சிரி வால்ட் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் RCDS பிரதிநிதிகளுடன்
மூலோபாய கலந்துரையாடலில் ஈடுபட்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (மே 21) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில், ஐக்கிய இராச்சியத்தின் (UK) ரோயல் பாதுகாப்பு ஆய்வுகள் கல்லூரியின் (RCDS) பிரதிநிதிகளுடன் நடந்த மூலோபாய கலந்துரையாடலுக்கு தலைமை தாங்கினார்.
தேசிய வான்வழி தேடல் மற்றும் மீட்புக் குழு கூட்டத்தில்
பாதுகாப்புச் செயலாளர் கலந்து கொண்டார்
தேசிய வான்வழி தேடல் மற்றும் மீட்புக் குழு (NASC) இன்று (மே 21) பத்தரமுல்லையில் உள்ள மகநெகும - மகாமெதுர வளாகத்தில் கூடியது. இந்தக் கூட்டத்தில் அக்குழுவின் இணைத் தலைவரான பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவும் (ஓய்வு) கலந்து கொண்டார்.
இஸ்ரேலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்
இலங்கைக்கான இஸ்ரேலிய தூதுவர் மேதகு ரூவன் சேவியர் அசார், இன்று (மே 20) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை (ஓய்வு) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் உள் விவகாரப் பிரிவு திறந்து வைப்பு
கௌரவ ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி செயலக சுற்றறிக்கையின் அறிவுறுத்தல்களின்படி, அரச நிறுவனங்களில் சேவைகளை வழங்குவது தொடர்பான விசாரணைகள் மற்றும் புகார்களைப் பெறுவதற்காக அனைத்து அரச நிறுவனங்களிலும் உள்ளக விவகாரப் பிரிவுகளை நிறுவுதல் இப்போது தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, பாதுகாப்பு அமைச்சின் கீழ் ஒரு உள் விவகாரப் பிரிவை (IAU) நிறுவும் நிகழ்வு இன்று (மே 20) பாதுகாப்பு அமைச்சின் வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தா (ஓய்வு) தலைமையில் நடைபெற்றது.
16வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழா
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ அனுர குமார திசாநாயக்க, இன்று (மே 19) கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் நடைபெற்ற 16வது தேசிய போர் வீரர்கள் நினைவு விழாவிற்கு தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில், தேசத்திற்காக உயிரை தியாகம் செய்த முப்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்கள (CSD) வீரர்களின் தியாகங்கள் நினைவுகூரப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ரணவிரு செவனவில் யுத்த வீரர்களை சந்தித்தார்
போர் வீரர் நினைவு தினத்தை முன்னிட்டு, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) இன்று (மே 19) ராகமவில் உள்ள ரணவிரு சேவனவிற்கு விஜயம் செய்தார்.
80வது CISM பொதுச் சபை மற்றும் மாநாட்டை
பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆரம்பித்து வைத்தார்
இன்று (மே 19) கொழும்பு கிராண்ட் மெய்ட்லேண்ட் ஹோட்டலில் , சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் (CISM) 80வது பொதுச் சபை மற்றும் மாநாட்டை பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
16வது தேசிய போர்வீரர் நினைவு விழா ஜனாதிபதி தலைமையில்
16வது தேசிய போர்வீரர் நினைவு விழா, மே 19, 2025 அன்று, கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவுச்சின்னத்தில், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான மேதகு அனுர குமார திசாநாயக்கவின் தலைமையின் கீழ் நடைபெறும்.
பாதுகாப்பு அமைச்சின் 'பக்மஹா உலெல' புத்தாண்டு கொண்டாட்டங்களில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் கலந்து கொண்டார்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு), பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (மே 16) பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு 'பக்மஹா உலெல'கலாச்சார விழாவில் கலந்து சிறப்பித்தார். பாரம்பரிய விளையாட்டுகள், மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளால் நிறைந்த இந்த நிகழ்வில், ஒற்றுமை மற்றும் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில் அமைச்சின் அனைத்து பிரிவுகளிலும் சேவையாற்றும் இராணுவ மற்றும் சிவில் ஊழியர்கள் மிகுந்த உட்சாகத்துடன் கலந்துக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
16வது தேசிய போர்வீரர் நினைவு விழா பிரதான நிகழ்வு கொழும்பில்
16வது தேசிய போர்வீரர் நினைவு விழா இம்மாதம் 19ஆம் திகதி கோட்டே, ஸ்ரீ ஜெயவர்தனபுராவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவு தூபியில் நடைபெறவுள்ளது.
'புத்த ரஷ்மி 2025' தேசிய வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் தொடக்க விழாவில்
பாதுகாப்பு பிரதி அமைச்சர் பங்கேற்றார்
கொழும்பு, ஹுணுபிட்டிய கங்காராமய விகாரை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகமும் இணைந்து ஏற்பாடு செய்த 'புத்த ரஷ்மி 2025' தேசிய வெசாக் வலயத்தின் மூன்றாம் நாள் தொடக்க விழா நேற்று (மே 14) மாலை நடைபெற்றது. இதில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர (ஓய்வு) கலந்து கொண்டார்.
இலங்கை GCSP உடன் இணைந்து 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள்
பாடநெறியை நடத்துகிறது
ஜெனீவா பாதுகாப்பு கொள்கை மையம் (GCSP), இலங்கை பாதுகாப்பு அமைச்சுடன் (MOD) இணைந்து, மே 14 அன்று கொழும்பில் உள்ள ஜெனரல் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் (KDU) 7வது சர்வதேச பாதுகாப்பு இணைப்பாளர்கள் பாடநெறியைத் ஆரம்பித்தது. 35 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களை ஒன்றிணைக்கும் இந்த பாடநெறி, 2025 மே 14 முதல் 21 வரை நடைபெறும்.