கொரோனா வைரஸ் தடுப்பு சட்டங்கள் தொடர்பான வர்த்தமானி வெளியீடு

ஒக்டோபர் 16, 2020

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான  முக்கிய சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதை கட்டாயப்படுத்தும் கொரோனா வைரஸ் தடுப்பு விதிமுறைகள் தொடர்பாக நேற்று நள்ளிரவு (ஒக்.14)  முதல் அமுலுக்கு வரும்வகையில்  சுகாதார அமைச்சினால் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானி அறிவித்தலில் அலுவலகங்கள் மற்றும் வணிக நிலையங்கள் ஆகியவற்றில் பின்பற்ற வேண்டிய கொரோனா தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு வழிகாட்டுதல்கள் அடங்கியுள்ளன.

முக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளிகளை பேணுதல், வணிக மற்றும் அலுவலகங்கள், பயணக் கட்டுப்பாடுகள், தனிமைப்படுத்தல் மற்றும் போக்குவரத்து போன்ற வழிகாட்டுதல்கள் என்பன  வழங்கப்பட்டுள்ளன.

புதிய வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக அபராதமோ அல்லது ஆறு மாத கால சிறைதண்டனையோ அல்லது இரண்டு மாதசிறை தண்டனையோ நீதிமன்றங்கள்  விதிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.