செய்தி   செய்தி

பிரதமரின் பிறந்தநாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

நவம்பர் 18, 2020

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஆசி வேண்டி நாரஹென்பிட்ட  அபயராமய விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட சமய நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன கலந்து கொண்டார்.

நாட்டில் புரையோடிக் காணப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து சுதந்திரக் காற்றைச் சுவாசிக்கச் செய்தவர் அப்போது ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தளபதியாகவும் செயற்பட்ட மஹிந்த ராஜபக்ஷ என்பது குறிப்பிடத்தக்கது.