--> -->

பாதுகாப்பு செயலாளர் தலைமையில் சமய ஊர்வலங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பான கூட்டம்

ஜூன் 27, 2019

பிரதம விகாராதிபதிகள் மற்றும் விகாரைகளின் முக்கிய அதிதிகள் ஆகியோருடனான சந்திப்பு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்களின் தலைமையில் இன்று(ஜூன்,27) பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. விகாரைகளினால் வருடாந்தம் நடாத்தப்படும் பெரஹர நிகழ்வுகளின் போது அவற்றுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வாறு அமையவுள்ளது என்பது தொடர்பாக இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.

சமய மற்றும் கலாச்சார மரபுகளின் முக்கிய அங்கமான வரலாற்று சிறப்புமிக்கக வருடாந்த பெரஹர ஊர்வலங்களை ஒழுங்கமைக்கும்போது பாதுகாப்பு வழங்குவது தொடர்பாக பல முக்கிய பிரச்சினைகள் இங்கு கலந்துரையாடப்பட்டன. இக் கண்கவர் பெரஹர ஊர்வலங்களைக் கண்டுகளிக்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர், மக்கள் மற்றும் இருப்பிடங்களின் முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய இந்த ஆண்டு சிறப்பு ஏற்பாடுகள் பல செயற்படுத்தப்படவுள்ளன எனவும் இது தொடர்பாக தனது முழுமையான ஒத்துழைப்பை சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்குவதாகவும் செயலாளர் உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் களனி ரஜமஹா விஹாரை, மஹியங்கன ரஜமஹா விஹாரை, பெல்லன்வில ரஜமஹா விஹாரை மற்றும் நவகமுவ பதினி தேவாலயம் ஆகிவற்றின் பிரதம விகாராதிபதிகள், தலதா மாலிகை உள்ளிட்ட முக்கிய விகாரைகளின் பஸ்நாயக்க நிலமேக்கள் மற்றும் பாதுகாவலர்கள், தேசிய புலனாய்வுத் துறைத் தலைவர், ராணுவ இணைப்பு அதிகாரி, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.