--> -->

பொலிஸ் மருத்துவ சேவை பிரிவு அபிவிருத்தி தொடர்பாக செயலாளர் கலந்துரையாடல்

ஒக்டோபர் 19, 2019

பொலிஸ் மருத்துவ சேவை பிரிவு அபிவிருத்தி தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமையன்று (ஒக்டோபர்,18) இடம்பெற்ற  இக் கலந்துரையாடலில்  பதில் பொலிஸ்மா அதிபர்  சிடி விக்ரமரத்ன, மேலதிக செயலாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு. துசித வணிகசிங்க மற்றும் சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் டாக்டர் சுனில் டி அல்விஸ். சிரேஷ்ட அரச அலுவலர் சங்கத்தின் பிரதிநிதிகள்,  நலன்புரி நடவடிக்கைகளுக்கான பிரதி பொலிஸ்மா அதிபர் ரன்மால் கொடித்துவக்கு, தலைமை மருத்துவ அதிகாரி,  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்  டாக்டர் ரோஹிதா பெர்னாண்டோ, பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், சிரேஷ்ட வைத்திய அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பொலிஸ் மருத்துவமனையை உகந்த அளவில் செயல்பட வைக்கும் வகையில் பொலிஸ் மருத்துவ சேவை பிரிவுக்கான மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களை நியமித்தல் உள்ளிட்ட முக்கிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன. பொலிஸ் மருத்துவ அதிகாரிகளான உபசேவை  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டாக்டர் கலிங்க கினிகே, உபசேவை   பொலிஸ் அத்தியட்சகர்  டாக்டர் சமேந்திர ரணசிங்க, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர். திரு.சமிக பி விக்ரமசிங்க (பணிப்பாளர் / பொலிஸ் மருத்துவ சேவை பிரிவு ) உபசேவை  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டாக்டர் ரவீந்திர பஸ்நாயக்க ஆகியோர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டு தமது  கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

பாதுகாப்பு  செயலாளர், பொலிஸ் மருத்துவ சேவை பிரிவு எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர  தீர்வுகளைக் பெற்றுக்கொடுப்பதற்காக பொலிஸ் மருத்துவ சேவை அதிகாரிகளுடன்  நீண்ட கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போது பொலிஸ் மருத்துவ சேவை பிரிவின் வளர்ச்சியைக் கண்காணிப்பதற்காக  உப குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும் செயலாளர் பணிப்புரை வழங்கினார்.