--> -->

போர் வீரர்கள் நினைவு தின நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் கலந்து சிறப்பிப்பு

நவம்பர் 10, 2019

கொழும்பு விகார மஹா தேவி பூங்காவில் உள்ள போர் வீரர்கள் நினைவு மண்டபத்தில் இடம்பெற்ற போர் வீரர்கள் நினைவு தினம் மற்றும் பொப்பி மலர் அணிவிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி என்டிசி அவர்கள் இன்று (நவம்பர், 10) கலந்து சிறப்பித்தார்.

குறித்த நிகழ்வினை இராணுவத்தின் முன்னாள் சேவையாளர் சங்கம் ஏற்பாடுசெய்திருந்தது.

மேலும் இதன்போது, பாதுகாப்பு செயலாளர் அவர்களை தொடர்ந்து இங்கு வருகைதந்த ஏனைய அதிதிகளும்  நினைவுத்தூபிக்கு மலர் வலயம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

தாய் நாட்டை பாதுகாப்பதற்காக தனது உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்களை நினைவு கூறும் வகையில் வருடாந்தம் இந்நிகழ்வு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

1921ம் ஆண்டு நவம்பர் மாதம் 07ம் திகதி படைவீரர்கள் நினைவகம் கொழும்பு காலிமுகத்திடலில் நிறுவப்பட்டபோதும், பின்னர் அது அழிக்கப்பட்டு இரண்டாம் உலக மகா யுத்த காலப்பகுதியில் தற்போதைய இடத்தில் மீண்டும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.

இந்நிகழ்வில், பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி, முப்படை தளபதிகள், இராஜதந்திரிகள், இலங்கை முன்னாள் இராணுவ சேவையாளர் சங்கத்தின் அங்கத்தவர்கள்,  இராணுவ வீரர்கள், யுத்தத்தில் பங்கு பற்றி உயிர்த்தியாகம் செய்த படை வீரர்களின் குடும்ப அங்கத்தவர்கள் ஆகியோர் உட்பட  பலரும் கலந்துகொண்டனர்.