--> -->

போதைபொருள் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக பாதுகாப்பு அமைச்சினால் விஷேட செயலணி

ஜனவரி 27, 2020

திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் போதைபொருள் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக வெகுவிரைவில் விஷேட செயலணி ஒன்று உருவாக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்ன தெரிவித்தார்.

அரச நிறுவனங்கள் மற்றும் ஏனைய பங்காளர்களுடன் திறம்பட ஒருங்கிணைந்து செயற்படும் வகையில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பட்டு சபையிடம் (என்.டி.டி.சி.பி) இதுவரை காலமும் சரியான ஒரு பொறிமுறை காணப்படவில்லை எனவும்  அவர் மேலும்  தெரிவித்தார்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பட்டு சபைக்கு நேற்று விஜயம் செய்த பாதுகாப்பு செயலாளர் அதன் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுடன் கலந்துரியாடினார். இதன்போது பாதுகாப்பு செயலாளர் கருத்து தெரிவிக்கையில்:- திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்படும் போதைபொருள் நடவடிக்கைகளை முறியடிபதற்கு   பாதுகாப்புப் படைகள், பொலிஸார், விஷேட அதிரடிப்படை மற்றும் சுகாதார அமைச்சு போன்ற பொறுப்புவாய்ந்த அரச நிறுவனங்களின் ஒத்துளைப்பின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பட்டு சபையின் நிர்வாகத்தை மறுசீரமைத்தல் தொடர்பாக கருத்து தெரிவித்த செயலாளர், திறமைவாய்ந்த நிரந்தர உயர் நிறைவேற்று அதிகாரிகள்  மிக விரைவில் நியமிக்கப்படுவார்கள். அத்துடன் சிறைச்சாலைகளில் இருந்து போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர்  மற்றும் அதனை செயற்பாடுத்துவோர் மட்டுமல்லாமல், போதைப்பொருள் பாவனையாளர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.” என்றும் அவர் கூறினார்.

பணியாளர்களின் வேலை நேரம் பற்றி தெரிவிக்கையில், “நாட்டுக்கு இன்னும் கூடுதலாக தமது பணிகளை வழங்குமாறு பாதுகாப்பு செயலாளர் பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.

தனது காலப்பகுதியிலான இராணுவ செயற்பாடுகளை நினைவு கூர்ந்த அவர், தொடர்ச்சியான கற்றல் அமர்வுகள், பயிற்சிப் பட்டறைகள், தனிநபர்களை ஊக்குவிப்பதற்கான தலைமைத்துவ பயிற்சிகளை வழங்குவது மற்றும் செயல் திறன்களைப் பகிர்ந்து கொள்வதன் அவசியம் தொடாபாகவும் இதன்போது வலியுறுத்தினார்.

இதேவேளை, போதைப்பொருள் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக பொது மக்களிடமிருந்து தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் தலைமையகத்தில் 24 மணி நேரமும் செயற்படும் வகையில் விஷேட நடவடிக்கை பிரிவு ஒன்றினை பாதுகாப்பு செயலாளரின் வழிகாட்டலின் கீழ் அண்மையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பணிப்பாளர் நாயகம் (பதில்) அலோக பண்டார, சிரேஷ்ட உதவி செயலாளர், சகுனிகா சுமதிபால, மேலதிக செயலாளர் (பதில்) மளிக்க சூரியப்பெரும, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பட்டு சபையின் பணியாளர்கள், மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.