'கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்' 'இட்டுகம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்' என பெயர் மாற்றம் - ஜனாதிபதி ஊடகப் பிரிவு

மே 21, 2020

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்ட 'கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்' 'இட்டுகம கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியம்' என பெயர் மாற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் 'கொவிட்-19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு நிதி உதவியை பெற்றுக் கொடுக்கும் வகையில் இட்டுகம ஊடக அனுசரணை பாதுகாப்பு அமைச்சினால் அன்மையில் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை வங்கியின் நகர கிளையில் விசேட கணக்கு இலக்கத்தின் (85737373) தற்போது 1,128 மில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டுள்ளது.

காசோலைகள் மற்றும் தொலை பணப் பரிமாற்றங்கள் மூலம் இந்த கணக்கு இலக்கத்தில் வைப்பில் இடப்படும் தொகைகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.