செய்தி   செய்தி

சந்தஹிரு சேய நிர்மாணப்பணிகளை பாதுகாப்புச் செயலாளர் கண்காணிப்பு

நவம்பர் 15, 2020

அனுராதபுரத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சந்தஹிரு சேய  தூபியின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன  கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

இதன்போது சந்தஹிரு சேய  தூபியின் நிர்மாணப்பணிகளின் முன்னேற்றங்கள் குறித்து மேஜர் ஜெனரல் குணவர்த்தனவுக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

இந்த மாபெரும் திட்டத்தின் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு இதன்போது தேவையான அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதல் என்பன பாதுகாப்புச் செயலாளரினால் வழங்கப்பட்டது.

மேலும் இந்த வருகையை நினைவு கூறும் வகையில் மேஜர் ஜெனரல் குணரத்னவினால் தூபியில் சில கற்கள் வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.