கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 439 பேர் நேற்று அடையாளங் காணப்பட்டனர்

நவம்பர் 20, 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 327 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களின் மொத்த எண்ணிக்கை 18,841ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளான அவர்களின் எண்ணிக்கை 15,324 அதிகரித்துள்ள அதேவேளை நேற்றைய தினம் மாத்திரம் சுமார் 10,356 பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் களுத்துறை , கொழும்பு 10 மற்றும் கொழும்பு 15 ஐச் சேர்ந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மூவர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 73 ஆக பதிவாகியுள்ளதாகவும் முப்படையினரால் மேற்பார்வை செய்யப்படும்36 தனிமைப்படுத்தல் மையங்களில் 3,812 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.