செய்தி   செய்தி

கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம் பாதுகாப்பு செயலாளரருடன் சந்திப்பு

மே 10, 2019

கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விஜேதுங்க அவர்கள், பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் எஸ்எச்எஸ்.கோட்டேகொட (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி வீஎஸ்வீ யுஎஸ்பி அவர்களை வியாழக்கிழமையன்று (மே, 09 ) சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் கடலோர பாதுகாப்புபடை பணிப்பாளர் நாயகம் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அத்துடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.