மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கொழும்பு வருகை

நவம்பர் 27, 2020


இந்தியா, இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கிடையில் நடைபெறவிருக்கும் முத்தரப்பு கடல்சார் கலந்துரையாடலில் கலந்து கொள்ளும் பொருட்டு மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் கௌரவ மரியா தீதி இன்றைய தினம் கொழும்புக்கு வந்தடைந்தார்.

இலங்கையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தியா, இலங்கை மாலைத்தீவு ஆகிய நாடுகளுக்கிடையிலான கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான 4 வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மட்ட முத்தரப்பு மாநாடு  சனிக்கிழமை இடம்பெற உள்ளது.

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த மாலைதீவு பாதுகாப்பு அமைச்சரை இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஒமர் அப்துல் ரஸ்ஸாக் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோர் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.