--> -->

ஊடக அறிக்கை

ஏப்ரல் 28, 2019

பொதுமக்கள் மத்தியில் பிரிவினையை அல்லது முரண்பாடுகளை ஏற்படுத்தி இனவாத அல்லது மதவாத குழப்பங்களை தோற்றுவிக்கும் வகையில் பொய்யான செய்திகள், தகவல், படங்கள், நேர்காணல்கள் அல்லது ஏதாவது வெளியீடுகள் ஆகியவற்றை வெளியிடும் தனிநபர்கள், குழுக்கள் அல்லது நிறுவனங்கள் என்பவற்றுக்கு எதிராக அவசரகால சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அவசரகால சட்டத்தின் கீழ், உண்மைக்குப் புறம்பான தகவல்கள் மற்றும் வதந்திகளைப் பரப்பும் குறித்த நபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அவசரகால ஒழுங்குமுறைகளுக்கு அமைய, பாதுகாப்புப் படைகளை தவறாக வழிநடத்தும் வகையில் தவறான அறிக்கைகள் அல்லது செயல்களில் ஈடுபடும், நபர்கள், குழுக்கள் அல்லது அமைப்புக்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, அனைத்து தரப்பிலுள்ள பொதுமக்களும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதிலிருந்து தவிந்துகொள்ளுமாறு கடுமையாக எச்சரிக்கப்படுகின்றனர்.