இராணுவத்தின் 70வது ஆண்டு நிறைவையொட்டி கத்தோலிக்க வழிபாட்டு நிகழ்வுகள்

ஒக்டோபர் 05, 2019

இலங்கை இராணுவத்தின்  70வது ஆண்டு நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட  கத்தோலிக்க வழிபாட்டு நிகழ்வுகள் கொழும்பு- 04 பம்பலப்பிட்டி புனித மரியாள் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று (ஒக்டோபர், 04) இடம்பெற்றது.  

இலங்கை இராணுவத்தின்  கத்தோலிக்க சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ்வைபவத்தில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினால்  சமய நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டது.   

இவ்விஷேட சமய நிகழ்வில், இராணுவத்தினருக்கும் இராணுவ கொடிகளுக்கும் ஆசீர்வாதம் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் இராணுவ வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.