--> -->

இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு விஷேட முத்திரை வெளியீடு

ஒக்டோபர் 11, 2019

ஆயிரக்கணக்கான இராணுவ வீரர்கள் தரமுயர்த்தப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு தின பிரதான நிகழ்வு கொழும்பு காலி முகத்திடலில் நேற்றுக் காலை வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு நடைபெற்ற மரியாதை அணிவகுப்பில்  இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட  இராணுவ வீரர்கள் கலந்துகொண்டு தமது இராணுவ தளபதிக்கு மரியாதை செலுத்தினர்.

பிரதான நிகழ்வு தாய் நாட்டுக்காக உயிர்நீர்த்த போர்வீரர்களை நினைவு கூர்ந்து   இரண்டு நிமிட மௌனாஞ்சலி செலுத்தியதன் பின் ஆரம்பமானது.

 ஜனாதிபதி ட்ரஞ்சியன்ஸ், ஜனாதிபதியின் 'ரண பரஷுவ' , ஜனாதிபதி வண்ணங்கள், காலாட் படை பீரங்கிகள், கவச  வாகனங்கள்,  கனரக ஆயுத வாகனங்கள் என்பன இம்மரியாதை அணிவகுப்பினை அலங்கரித்தன.

இந்நிகழ்வில் உரை நிகழ்த்திய இராணுவ தளபதி,  7,210 இராணுவத்தினர் இன்றைய தினம் தரமுயர்த்தப்பட்டுள்ளதாகவும் வரலாற்றில்  அதிகமானோருக்கு தரமுயர்வு வழங்கப்பட்டது இதுவே முதற் தடவையாகும் என குறிப்பிட்டார். இதற்கேற்ப 210 இராணுவ அதிகாரிகளுக்கும் 7,000 இராணுவ வீரர்களுக்குமே இவ்வாறு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன. இவர்களில் 3 பேர் இரண்டாவது லெப்டினன்ட் தரத்திலிருந்து லெப்டினன்ட் தரத்திற்கும், 17 பேர் லெப்டினன்ட் தரத்திலிருந்து கெப்டன் தரத்திற்கும், 150 பேர் கெப்டன் தரத்திலிருந்து மேஜர் தரத்திற்கும் 40 பேர் மேஜர் தரத்திலிருந்து லெப்டினன்ட் கேர்ணல் தரத்திற்குமே உயர்த்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை,  இராணுவத்தின் 70ஆவது ஆண்டு நிறைவு தினத்தை முன்னிட்டு, அஞ்சல் திணைக்களத்தினால்,  முத்திரை ஒன்று வெளியிட்டுவைக்கப்பட்டது.  

இவ்வைபவத்தின் போது வெளியிட்டு வைக்கப்பட்ட ஞாபகார்த்த முத்திரையினை தபால் மா அதிபர் திரு டிஏஆர்கே ரணசிங்க அவர்களிடமிருந்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்ககள் பெற்றுக்கொண்டார்.