விமானப்படையினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு கையளிப்பு

நவம்பர் 04, 2019

விமானப்படையினரால்  நிர்மாணிக்கப்பட்ட  புதிய வீடு ஒன்று, வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பத்திற்கு அண்மையில் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டது.   இலங்கை விமானப்படையின் 41வது வருடப்பூர்த்தியை முன்னிட்டு வவுனியா விமானப்படை தளத்தினால்  நிர்மாணிக்கப்பட்ட இப்புதிய வீடு  வவுனியா குடாகச்சகொடி பிரதேசத்தில் வசிக்கும் ஒன்பது வயது பையனை உடைய  விதவைத் தாய் ஒருவருக்கு வழங்கி வைப்பட்டதாக விமானப்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமானப்படைத் தளத்தில் சேவை புரியும் அதிகாரிகள் மற்றும் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் ஆகியோரினால் கூட்டாக அளிக்கப்பட  நிதி உதவியுடன் விமானப்படை வீரர்களின் தொழிநுட்ப மற்றும் உடல் உழைப்பின் மூலம் இப்புதிய வீடு நிர்மாணிக்கப்பட்து. அத்துடன் இவ்விதவைத் தாய்க்கு சமையலறை மற்றும் குளியலறை உபகரணங்கள் மற்றும்  பொருட்களும்  இதன்போது வெகுமதியாக அளிக்கப்பட்டன.

பயனாளியான விதவைப்பெண்ணின்  கணவர் சிவில் பாதுகாப்பு படையில் சேவையாற்றிய ஒருவர் என்றும் அவர் கடமையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில்  உயிரிழந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.