ஆப்கானிஸ்தான் தூதுவர் இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

நவம்பர் 05, 2019

இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் தூதுவர், அதிமேதகு திரு. எம் அஷ்ரப் ஹைடரி அவர்கள் வெகுஜன ஊடக அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமான  கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (நவம்பர், 05) சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற  சினேகபூர்வ  சந்திப்பின் போது ஆப்கானிஸ்தான் தூதுவர் மற்றும் இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன ஆகியோருக்கிடையே இரு தரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக கலந்துரையாதப்பட்டன.

மேலும், இச்சந்திப்பினை  நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிகொள்ளப்படன.