மாலி நாட்டில் அமைதிகாக்கும் பணிகளின்போது உயிரிழந்த இராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகை கையளிப்பு

நவம்பர் 06, 2019

ஐ. நா.  பலபரிமான ஒருங்கிணைப்பு நிலைப்படுத்தல் திட்டத்திற்கு அமைய மாலி நாட்டில் அமைதிகாக்கும் பணிகளில்  ஈடுபட்டிருந்த வேளையில்  உயிரிழந்த இரண்டு இராணுவ வீரர்களின் குடும்பத்திற்கான இழப்பீட்டுத் தொகை நேற்றயதினம் கையளிக்கப்பட்டது.  இராணுவ தலைமையகத்தில் நேற்று (நவம்பர்,05)  இடம்பெற்ற  வைபவத்தின்போது இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் இவ் இழப்பீட்டுத் தொகை  கையளிக்கப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை இராணுவத்தின் 11ஆவது இலேசாயுத காலாட் படையணியைச் சேர்ந்த மேஜர் எச்.டப்ள்யூ.டீ ஜயவவிக்ரம மற்றும் 1ஆவது பொறிமுறை காலாட் படையணியைச் சேர்ந்த  சாஜன் விஜயகுமார எஸ்.எஸ். ஆகியோர்  மாலியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை இராணுவ தொடரணியை   இலக்கு வைத்து நடாத்தப்பட்ட  குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தனர்.   

உயிரிழந்த மேஜர் ஜெயவிக்ரம  இறக்கும் போது திருமணமாகாததால்  அவரின் பெற்றோருக்கு  இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்ட அதேவேளை, மறைந்த சாஜன் விஜயகுமாரவின் தாய், மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கு    ஐ.நா.  இழப்பீட்டு கட்டமைப்பிற்கு அமைய இழப்பீட்டுத் தொகை  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.