செய்தி   செய்தி

பாதுகாப்பு செயலாளர் கண்டியில் உள்ள புனித சின்னங்களை தரிசிப்பு

நவம்பர் 30, 2019

பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்டப்வீ ஆர்டப்பீ ஆர்எஸ்பி  யுஎஸ்பி என்டிசி பிஎஸ்சி எம்பிள் அவர்கள் இன்று (நவம்பர், 30) தலதா மாளிகையில் அமைந்தள்ள புனித தந்ததாதுவினை தரிசிப்பதற்காக கண்டிக்கு விஜயம் செய்தார். தலதா மாளிகைக்கு வருகைந்தந்த பாதுகாப்பு செயலாளரை தலதா மாளிகையின் தியவதன நிலமே, நிலங்க தெல பண்டாரா அவர்கள் வரவேற்றதுடன் சமய அனுஷ்டானங்களுக்காக மண்டபத்தின் அக அறைக்கும் அழைத்துச் சென்றார்.  

பின்னர், பாதுகாப்பு செயலாளர் மல்வத்து பீட மகா நாயக்க தேரர் அதி  வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும்  அஸ்கிரிய பீடத்தின் மகா நாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரர் மற்றும் ராமனாங்க பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய நபன பெமசிரி தேரர் ஆகியோர்களை தரிசித்து அவர்களின் ஆசீர்வாதத்தினை பெற்றுக்கொண்டார்.  

பின்னர், பாதுகாப்பு செயலாளர் கட்டன்பே ராஜா மகா விஹாரைக்கு விஜயம் செய்ததுடன் அங்கு ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்டார்.  

2019 நவம்பர் 20 ஆம் தேதி பாதுகாப்பு செயலாளராக பதவியேற்ற பின்னர் புனித தலதா மாளிகைக்கு விஜயம் செய்தது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.