செய்தி   செய்தி

சீனக் குடாவில் இடம்பெற்ற விமானப்படையின் அணிவகுப்பில் பாதுகாப்புச் செயலாளர் பங்கேற்பு

நவம்பர் 16, 2020

சீனக்குடாவில் உள்ள விமானப்படை அகடமியில் கலா சாலையில்  இன்று காலை நடைபெற்ற இலங்கை விமானப்படையின் அதிகாரிகளின் பிரியாவிடை அணிவகுப்பு நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன  கலந்து கொண்டார்.

இலங்கை விமானப்படை தளபதி எயார் வைஸ் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

ஜனாதிபதி வர்ணம், ஒன்பதாவது விமானங்கள் உள்ளடங்களாக 3 ஸ்கொட்ரனினால் வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பை பாதுகாப்புச் செயலாளர் இதன்போது ஏற்றுக்கொண்டார்.

பயிற்சிகளை முடித்துக் கொண்ட 53 அதிகாரிகள் கமிஷன் அதிகாரிகளாக இன்று வெளியேறினர். இவர்களில் இரண்டு பெண் அதிகாரிகளும் அடங்குவர்.  இலங்கை விமானப்படையின் வரலாற்றில் இரண்டு பெண் அதிகாரிகள் விமானிகளாக  வெளியேறியுள்ளது  இதுவே முதல் முறையாகும்.

கெடெட் அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு 61 பெண் கெடெட் அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு 13 கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஆட்சேர்ப்பு இலக்கம் 33 மற்றும் 34 ஆகியவற்றைச் சேர்ந்த விமானப்படை அதிகாரிகள் கொமிஷன் அதிகாரிகளாக இன்று வெளியேறினர்

இலங்கை விமானப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், விருந்தினர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.