மாநில பாதுகாப்பு அமைச்சர்
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் வருடாந்த அமர்வு ஆரம்பம்
இலங்கை இராணுவ மருத்துவக் கல்லூரியின் (SLCOMM) மூன்றாவது வருடாந்த கல்வியாண்டுக்கான அங்குரார்ப்பன நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் ,22) அத்திட்டிய ஈகிள்ஸ் லேக்சைட் மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாது. இந்நிகழ்வு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
அமெரிக்க தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதிமேதகு திருமதி. அலைனா பி டேப்ளிட்ஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (பெப்ரவரி , 15) சந்தித்தார்.
இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் வெற்றிகரமாக நிறைவு
இலங்கை மற்றும் ஜப்பானிய கடற்படை அதிகாரிகளுக்கிடையிலான கலந்துரையாடல் இன்றைய தினம் (பெப்ரவரி, 15)வெற்றிகரமாக நிறைவு பெற்றது. கொழும்பு லைட் ஹௌஸ் கெலியில் இடம்பெற்ற நிறைவு தின நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டார்.
ஐ. நா. அமைதி காக்கும் படையின் உயிரிழந்த இலங்கை வீரர்களின் உடல்கள் நாட்டிற்கு கொண்டுவருகை
ஐ. நா. அமைதி காப்பு பணிகளின்போது உயிரிழந்த இலங்கை வீரர்களின் உடல்கள் நேற்றையதினம் (பெப்ரவரி,04) நாட்டிற்கு கொண்டுவரப்பட்டன. குறித்த தாக்குதல் சம்பவத்தின் போது உயிரிழந்த மேஜர் எச்.டபிள்யூ.டீ.ஜெயவிக்கிரம மற்றும் சார்ஜன் எஸ்.எஸ். விஜேகுமார ஆகிய வீரர்களின் உடல்கள் அடங்கிய பேழைகள் இலங்கை இராணுவத்தினரால் கையேற்கப்பட்டன.
இலங்கை தனது 71வது சுதந்திரதினத்தை கொண்டாடுகிறது
இலங்கையின் 71 வது சுதந்திர தினம் இன்று ஆகும்.71 ஆவது சுதந்திர தின நிகழ்வுகளும் பிரதான சுதந்திர தின அணிவகுப்பும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் காலி முகத்திடலில் இன்று காலை இடம்பெற்றது.
அவுஸ்திரேலியாவினால் இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு மூன்று துறைமுக படகுகள் அன்பளிப்பு
அவுஸ்திரேலியாவினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட மூன்று துறைமுக படகுகளை இலங்கை கடலோர பாதுகாப்பு படைக்கு கையளிக்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வு கொழுப்பு துறைமுகத்தில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் ரங்களவில் நேற்று (ஜனவரி,25) இடம்பெற்றது.
ஜப்பானிய தூதுவர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அதிமேதகு அகிர சுகியாமா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி,25 ) சந்தித்தார்.
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அதிமேதகு ஜேம்ஸ் டோரிஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி, 16) சந்தித்தார்.
கடற்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு
புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஜனவரி,04) சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் 2019ஆம் ஆண்டுக்கான சம்பிரதாய பூர்வ புது வருட நிகழ்வுகள்
மலர்ந்துள்ள புத்தாண்டை முன்னிட்டு அமைச்சில் இன்று (ஜனவரி, 01) காலை பாரம்பரிய நிகழ்வொன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
“சத்விறு சந்ஹிந்த” திட்டத்தினூடாக நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் ஜனாதிபதியினால் படைவீரர்களுக்கு கையளிப்பு
பத்தரமுல்ல அபே கமவில் இன்று (மே,10) இடம்பெற்ற “சத்விறு சந்ஹிந்த” படைவீரர்களுக்கான வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.