செய்திகள்
இவ்வருட தியவன்னா வெசாக் வலயம் 2024யினை பெருமளவிலான மக்கள் கண்டுகளித்தனர்
தியவன்னா வெசாக் வலயம் 2024 இன்று (மே 25) தொடர்ந்து மூன்றாவது நாளாக டென்சில் கொப்பேகடுவ மாவத்தை மற்றும் பத்தரமுல்ல பாதுகாப்பு அமைச்சின் வீதியை உள்ளடக்கி இன்று மாலை ஆரம்பமானது. கடந்த இரண்டு நாட்களாக வெசாக் வலயத்திற்கு பெருமளவான மக்கள் வருகை தந்துள்ளனர்.
தியவன்னா வெசாக் வலயம் 2024' இரண்டாவது நாளாக தொடர்கிறது
Tamil
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
நாட்டில் நிலவும் கடும் மழை மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அவசர செயற்பாட்டு நிலையத்தில் இன்று (மே 24) விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
பாதுகாப்பு செயலாளரினால் தியவன்னா வெசாக் வலயம் 2024 திறந்து வைப்பு
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் திரு.சுதர்ஷன குணவர்தன ஆகியோரினால் இன்று (மே 23) மாலை 'தியவன்னா வெசாக் வலயம் 2024' ஆரம்பித்து வைக்கப்பட்டது. 'புத்த ரஷ்மி' வெசாக் பண்டிகையை ஒட்டி இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெசாக் தின செய்தி
வெசாக் தினம் என்பது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் உலக பௌத்தர்களின் புனிதமான நாளாகும்.
Tamil
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் புதிய தலைமையக கட்டிடத்தை ஜனாதிபதி விக்கிரமசிங்க திறந்து வைத்தார்
இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தலைமையக கட்டிடம் இன்று (மே 22) பத்தரமுல்ல அக்குரேகொடவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
2024 புத்தரஷ்மி வெசாக் விழாவை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு தியான நிகழ்ச்சி நடைபெற்றது
'புத்தரஷ்மி வெசாக் விழா 2024' முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சில் சிறப்பு தியான நிகழ்ச்சி ஒன்று இன்று (மே 22) நடத்தப்பட்டது. அமைச்சின் நிர்வாகப் பிரிவின் ஏற்பாட்டில் இந்த சமய நிகழ்வு இடம்பெற்றது.
ஈட்டி எறிதலில் இலங்கை இராணுவ வீரர் உலக சாதனை படைத்தார்
ஜப்பானின் கோபி நகரில் நடைபெற்றுவரும் பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பங்கேற்கும் இலங்கை இராணுவ வாரண்ட் அதிகாரி II K.A சமித துலான் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனை படைத்தார்.
ஓய்வுபெற்ற படைவீரர்கள் அரச வைத்தியசாலைகளில் சுகாதார வசதிகளை பெற்றுக்கொள்வதில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் சுகாதார அமைச்சரை சந்தித்து கலந்துரையாடினார்
எமது தாய்நாட்டின் ஆட்புல ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்காகப் போராடி உயிர் தியாகம் செய்த ஆயுதப்படை வீரர்களின் குடும்ப உறுப்பினர்களும், ஓய்வுபெற்ற பாதுகாப்பு ப்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் அரச மருத்துவமனைகளில் இருந்து சுகாதார வசதிகளைப் பெறுவதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதை பல சந்தர்ப்பங்களில் அவதானிக்க முடிகிறது.
Tamil
15ஆவது தேசிய போர்வீரர் ஞாபகார்த்த தின நிகழ்வு
பிரதமரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது
தாய் நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்த முப்படையினர், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படை வீரர்களின் 15வது தேசிய போர்வீரர் ஞாபகார்த்த தின பிரதான நிகழ்வு இன்று (மே 19)இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கெளரவ தினேஷ் குணவர்தன அவர்களின் தலைமையில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் தூபிக்கு அருகில் நடைபெற்றது.
Tamil
புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கரை பாதுகாப்பு இராஜாங்க
அமைச்சர் தென்னகோன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரவேற்றார்
இலங்கை வந்தடைந்த புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவரும் உலக சமாதான தூதுவருமான குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் இன்று (மே 18) பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக வரவேற்றார்.
Tamil
Tamil
Tamil
Tamil
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களின் குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற, மருத்துவ காரணமாக ஓய்வுபெற்ற இராணுவத்தினரின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் விசேட வேலைத்திட்டம்
ஓய்வுபெற்ற, மருத்துவ காரணமாக ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் யுத்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விடயங்களை ஆராயும் நிகழ்ச்சி இன்று (மே 11) 53 ஆவது காலாட்படை பிரிவு தலைமையகத்தில் நடைபெற்றது.
Tamil
ரஷ்யா - உக்ரேன் போரில் ஈடுபட்டுள்ளதாக கருதப்படும் இலங்கை பிரஜைகள் பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ள சிறப்புப் பிரிவு ஸ்தாபிப்பட்டுள்ளது
ரஷ்ய - உக்ரேன் போருக்காக ஓய்வு பெற்ற இலங்கை பாதுகாப்பு படை வீரர்களை சட்டவிரோத வழிகளில் ஆட் கடத்தல் செய்தல் தொடர்பான தகவல்களைப் திரட்டுவதற்கு விசேட பிரிவு ஒன்றை நிறுவியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
Tamil
Tamil