செய்திகள்
ஜனாதிபதி அவர்களின் ஹஜ் வாழ்த்துச் செய்தி
ஆன்மிக மற்றும் உலக வெற்றியை அடைய, மனிதன் சுயநலத்தை விட்டொழித்து, தியாகம் மற்றும் நல்லிணக்கத்துடன் வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
Tamil
Tamil
Tamil
Tamil
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சு ஊழியர்களுக்கு
சேவா வனிதா பிரிவினால் நிதி உதவி
சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் ஏற்பட்ட வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் ஊழியர்களுக்கு அமைச்சின் சேவா வனிதா பிரிவு (SVU) நிதியுதவி வழங்கியது.
நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்கள் ஆகியோரின் நலன் மற்றும் நிர்வாக பணிகள் குறித்து ஆராயும் 6வது நிகழ்வு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் இடம்பெற்றது
ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ ரீதியாக ஓய்வுபெற்ற இராணுவத்தினர் மற்றும் போரில் உயிர் தியாகம் செய்த போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் நலன் மற்றும் நிர்வாக விவகாரங்களை ஆராயும் வகையில் இலங்கை இராணுவத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு நிகழ்வு இன்று (ஜூன் 08) மின்னேரிய காலாட்படை பயிற்சி முகாமில் இடம்பெற்றது.
முப்படைகளின் இராணுவ பயிற்சி பாடத்திட்டத்தில் ஆட்கடத்தல் பாடத்தையும் அறிமுகப்படுத்த தேசிய ஆட்கடத்தல் தடுப்பு பணிக்குழு திட்டமிட்டுள்ளது - பாதுகாப்பு செயலாளர்
மேலும், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மறுவாழ்வு மற்றும் மறு ஒருங்கிணைப்பு திட்டங்களில் ஆயுதப்படைகளின் ஈடுபாடு, எங்கள் விரிவான ஆட்கடத்தல் எதிர்ப்பு மூலோபாயத்தின் ஒரு முக்கிய அங்கமாகும்.
Tamil
செய்தி வெளியீடு
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலகை்கழகத்தின் MBBS பட்டப்படிப்பு நிகழ்ச்சித்திட்டத்திற்கு சிவில் மாணவர்களை அனுமதிப்பது குறித்து கொத்தலாவலப் பாதுகாப்பு பல்கலகை்கழகம் தெளிவுபடுத்துகிறது.
இலங்கை கடற்படையின் 1000வது நீர் சுத்திகரிப்பு நிலையம் (RO)
வெற்றிகரமாக நிறுவப்பட்டது
நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் உள்ள பொதுமக்களின் சுத்தமான குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக இலங்கை கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் 1,000வது நீர் சுத்திகரிப்பு நிலையம் (RO) நேற்று (ஜூன் 05) கல்கமுவ, பலுகடவல ஸ்ரீ சுமண வித்தியாலயத்தில் நிறுவியுள்ளது.
ஆசியாவில் இடம்பெற்ற இரசாயன ஆயுதங்கள் மாநாட்டின் 22வது பிராந்தியக் கூட்டத்தில் இலங்கையும் பங்கேற்றது
ஆசிய பிராந்திய இரசாயன ஆயுத மாநாட்டுடன் தொடர்புடைய பிராந்தியங்களின் தேசிய அதிகாரிகளின் 22வது பிராந்திய மாநாடு 2024 மே 29 முதல் 31 வரை உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றது.
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முன்னேற்றம் மற்றும் மேலதிக நிவாரண நடவடிக்கைகள் குறித்து கலந்தாலோசனை
தென்மேற்கு பருவமழையினால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் தேவையான மேலதிக நிவாரண நடவடிக்கைகளை மீளாய்வு செய்வதற்கான விசேட கலந்துரையாடல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இன்று (ஜூன் 05) கொழும்பில் உள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.
ஐக்கிய நாடுகள், சர்வதேச அரச சார்பற்ற மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் வெள்ள நிவாரண உதவிகளுக்கு கூடுதல் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதி
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஐக்கிய நாடுகள், சர்வதேச அரச சார்பற்ற மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பொன்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தலைமையில் இன்று (ஜூன் 05) கொழும்பில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்றது.
Tamil
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரின் முன்முயற்சியின் கீழ், ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது
ஓய்வுபெற்ற முப்படை வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு வழங்கும் நிகழ்ச்சித் திட்டம் குறித்து முப்படை வீரர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் நேற்று (ஜூன் 04) இடம்பெற்றது.
Tamil
அமெரிக்க இராணுவ பசுபிக் பிரதி கட்டளைத் தளபதி (மூலோபாயம் மற்றும் திட்டங்கள்) பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு
அமெரிக்க இராணுவ பசுபிக் பிரதி கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஸ்காட் ஏ. வின்டர் இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்தும் நிவாரணம் வழங்கப்படும் - பாதுகாப்பு இராஜங்க அமைச்சர்
சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, 262 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 33,422 குடும்பங்களைச் சேர்ந்த 130,021பேர் நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை இராணுவம், கடற்படையினர் வெள்ள நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைககளில் மும்முரம்
தொடர்மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையின் பல மீட்பு மற்றும் நிவாரண குழுக்களை ஈடுபடுத்தியுள்ளன.
ஆழ்கடலில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட ஆறு மீனவர்களும் இலங்கை கடற்படையினரால் பாதுகாப்பாக கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்
இலங்கைக்கு தெற்கே இந்தியப் பெருங்கடலில் இருந்து சுமார் 480 கடல் மைல் (சுமார் 889 கிமீ) தொலைவில் உள்ள ஆழ் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய நிலையில் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின்
இராஜாங்க அமைச்சர் தென்னகோன், அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடர்பில் அரச அதிகாரிகளுடன் அவசர கலந்துரையாடல்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் மற்றும் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் கௌரவ ஜனக வக்கும்புர ஆகியோரின் தலைமையில் இரத்தினபுரி மாவட்டத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (ஜூன் 02) இரத்தினபுரி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.