--> -->

முகக்கவசங்கள் மற்றும் சேஜிகள் ஓவரோல் கிட் ஆகியவற்றை தொழில்துறை கற்கைகளுக்கான ஜீனியஸ் கல்லூரி மற்றும் எஸ் கே டி நிறுவங்களினால் பாதுகாப்பு அமைச்சுக்கு அன்பளிப்பு

ஏப்ரல் 24, 2020

குருணாகலிலுள்ள  தொழில்துறை கற்கைகளுக்கான ஜீனியஸ் கல்லூரி மற்றும் ஜா எலயிலுள்ள எஸ் கே டி உற்பத்தி நிறுவங்களினால் 2,000 க்கும் மேற்பட்ட முகக்கவசங்கள் மற்றும் 250 சேஜிகள் ஓவரோல் கிட் என்பவற்றை பாதுகாப்பு அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஒய்வு) கமல் குணரத்தனவிடம் நேற்று (23) கையளித்துள்ளனர்.
 
பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற நிகழ்வில் இவ்விரு நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளர்களினால் வழங்கப்பட்ட ரூபா 350,000 பெறுமதியான நன்கொடை செயலாளரிடம் வழங்கி வைக்கப்பட்டது.

கொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக முன்னின்று செயற்படும் படையணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் பாதுகாப்பு அமைச்சின் முன்னெடுப்புகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் இன்னன்கொடை வழங்கி வைக்கப்பட்டதாக தொழில்துறை கற்கைகளுக்கான ஜீனியஸ் கல்லூரியின் முகாமைத்துவ பணிப்பாளர் சுரஞ்சித் ரத்நாயக தெரிவித்தார்.

இந்நிகழ்வில், எஸ் கே டி நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர், ஷானக டி சில்வா, ஜீனியஸ் கல்லூரியின் தகவல் தொழிநுட்ப நிறைவேற்று அதிகாரி மனோஜ் அருனதிலக மற்றும் நன்கொடையாளர் மகேஷி பிரியதர்ஷனி ஆகியோர் கலந்துகொண்டனர்.