பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய நபர் கைதுசெய்

ஜூன் 01, 2019

உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹரானுடன் தொடர்புடைய நபரொருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். கல்முனை சியாம் என அறியப்பட்ட அபூ ஹசன் என அழைக்கப்படும் சாகுல்ஹமீது ஹமீஸ் முஹம்மது எனும் சந்தேக நபரே இவ்வாறு (மே, 22) கைதுசெய்யப்பட்டுள்தாக நேற்று மாலை (மே, 31) பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தில் இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

கல்முனையில் பயங்கரவாதக் குழுவினர் பயன்படுத்திய பாதுகாப்பான பல வீடுகளை அவர் அறிந்திருந்ததாக புலனாய்வு விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. இதன்பிரகாரம் சம்மாந்துறையில் பயங்கரவாத குழுவினர் தற்கொலை குண்டுவெடிப்பில் பலியாகிய வீடும் இவர்களின் ஒரு பாதுகாப்பான வீடாகும் என குறித்த சந்தேகநபர் தெரிவித்ததுடன், சம்மாந்துரையின் சென்னால் கிராமத்திலுள்ள வீடொன்றும், நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய கிராமங்களில் பயங்கரவாதக் குழுவினர் பயன்படுத்திய பாதுகாப்பான இரு வீடுகளும் இவரினால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது

இதேவேளை, உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுவெடிப்பின் சூத்திரதாரி சஹரான் ஹாஷிமின் மடிக் கணினி ஒன்று பாலமுனை ஆற்றில் வெள்ளிகிழமையன்று (31) கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளினால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.