--> -->

தேவையுடைய குடும்பத்திற்கு யாழ் இராணுவத்தினரால் மற்றுமொரு புதிய வீடு நிர்மாணம்

ஜூன் 01, 2020
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறைந்த வருமானம் பெறும் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று இராணுவத்தினரால் பயனாளிக்கு நேற்றைய தினம் (ஜூன், 01) கையளிக்கப்பட்டது. 
 
குறித்த வீடு, யாழ்ப்பாணம் சங்காணை பிரதேசத்தில் வசித்து வரும் ஜெகதீஸ்வரன் அம்பிகாவதியின் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்டது. 
 
சுகாதார அதிகாரிகளின் வழிகாட்டுதல்களுக்கு அமைய ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரியவின் அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த யாழ் அரசாங்க அதிபர் கனபதிபில்லை மகேஷனினால் வீட்டின் சாவி பயணாளிக்கு வழங்கி வைக்கப்பட்டது.
 
வீட்டின் நிர்மாணப் பணிகளுக்காக நிதியுதவி அரச மற்றும் தனவந்தர்களினால் அளிக்கப்பட்டது. வீட்டின் நிர்மாணப் பணிகளுக்கான ஆளணிகள் இலங்கையில் இலேசாயுத படையணியின் 11வது படையணி, பொறியியலாளர் சேவை படையணியின் 5வது பொறியியலாளர் சேவை படையணியினால் வழங்கப்பட்டது.
 
இந்த நிகழ்வில், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், காணி தொடர்பான மேலதிக அரசாங்க அதிபர், சங்கானை பிரதேச செயலாளர், 51 ஆவது பிரிவின் பொது கட்டளைத்தளபதி, பிரிகெட்களின் கட்டளைத் தளபதிகள், வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி, இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.