--> -->

உரிய நடைமுறைகளை பின்பற்றாத அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிப்பு

ஜூன் 02, 2020

பதிவுசெய்யும் போது உரிய நடைமுறைகளை பின்பற்றாத அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆராயப்படவுள்ளன.

அரச சார்பற்ற நிறுவனங்களின் சந்தேகத்துக்குரிய நிதி மூலங்கள் மற்றும் செயற்திட்டங்கள் தொடர்பான விசாரணைகளை தேசிய அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகம் ஆரம்பித்துள்ளதாக அந்த செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் ராஜா குணரத்ன பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணைத்தளத்திற்கு தெரிவித்தார்.

நிறுவனங்களை பதிவு செய்யும் நடவடிக்கையில் உரிய நடைமுறைகளை மீறியதாக கருதப்படும் சில அரச சார்பற்ற நிறுவனங்களிடமும் விசாரணைகள் நடைபெற்று வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் கீழ்   செயற்படும் தேசிய அரச சார்பற்ற நிறுவனங்களின் செயலகமானது, அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவுகள் மற்றும் செயல்பாடுகளை மேற்பார்வை செய்து வரும் அதேசமயம், அவற்றை கண்காணித்தும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.