குணமடைந்த பலர் தங்களது வீடுகளுக்கு திரும்பினர் - கொவிட் -19 மத்திய நிலையம் தெரிவிவிப்பு

ஜூன் 08, 2020

தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்த 54 பேர் இன்று காலை (8) தங்களது வீடுகளுக்கு சென்றுள்ளதாக கொவிட்  -19 கொரோனா வரைஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கான தேசிய நடவடிக்கைகள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் 49 பேர் ரன்டம்பே தனிமைப்படுத்தல் நிலையத்திலும், ஐவர் கிளப் டொல்பின் தனிமைப்படுத்தல் நிலையத்திலும் தங்களது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ளதாக குறித்த நிலையம் தெரிவித்துள்ளது.

குறித்த நபார்களுக்கு பீ சீ ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர்  தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர். சந்தன விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இதன்பிரகாரம், இராணுவத்தினாரால் நடாத்தி செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து தமது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவுசெய்த  சுமார் 12,235 பேர் இன்றுவரை (ஜூன் 8) தமது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, முப்படையினரால் நடாத்தி செல்லப்படும் சுமார் 43 தனிமைப்படுத்தல் நிலையங்களில் தொடர்ந்தும் 5,282 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.