ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் பொலிஸாரால் கைது

ஜூன் 09, 2020

கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் வெவ்வேறு இடங்களில் ஹெரோயின் போதைப்பொருளுடன் தொடர்புடைய மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காலி, நுகேகொடை மற்றும் கல்கிஸ்ஸை ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.  

காலி பெடிகலவத்த பகுதியில் 520கிராம் 20 மில்லி கிராம் போதைப்பொருள் வைத்திருந்ததன் பேரில் 39 வயதுடைய  சந்தேக நபரை நேற்று (ஜூன் 8) பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.   

மேலும், மாதிவெல பிரகதிபுர பகுதியில் 11 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததன் பேரில் 31 வயதுடைய  சந்தேக நபரை மிரிஹான  பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.   

இதேவேளை, கல்கிஸ்ஸை வாட்டாரப்பல  பகுதியில் 2கிராம்  200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்ததன் பேரில் மற்றுமொரு சந்தேக நபரை கல்கிஸ்ஸை பொலிஸார்  கைதுசெய்துள்ளனர்.