--> -->

ஊரடங்கு சட்ட நேரங்களில் மாற்றம்

ஜூன் 13, 2020

நாளை, ஜுன் 14 ஞாயிற்றுக் கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் நல்லிரவு 12.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும்.

இவ்வாறு அமுல்படுத்தப்படும் குறித்த ஊரடங்கு நேரம் மறு அறிவித்தல் வரை தொடரும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அரச, தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களை நடத்திச்செல்லும் போதும், அன்றாட இயல்பு வாழ்க்கையின் போதும் கொரோனா ஒழிப்பு சுகாதார பரிந்துரைகளை முழுமையாக பின்பற்றுமாறு அரசாங்கம் அனைத்து தரப்பினரிடமும் கேட்டுக்கொண்டுள்ளது.