--> -->

விஷேட அதிரடிப்படையின் புதிய கட்டளைத்தளபதி பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

ஜூன் 15, 2020

விஷேட அதிரடிப்படையின் புதிய  கட்டளைத்தளபதி  பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர  பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஒய்வு ) கமல் குணரத்தனவை இன்று (ஜூன், 15 ) சந்தித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது,  விஷேட அதிரடிப்படையின் புதிய  கட்டளைத்தளபதி  மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சுமூக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதுடன்,   இச்சந்திப்பினை நினைவுகூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

மேல்மாகாணத்தின் வடபிராந்தியத்திற்கு பொறுப்பதிகாரியாக இருந்த  பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர கடந்த  (ஜூன்) 10ஆம் திகதி பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் புதிய கட்டளைத்தளபதியாக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.