--> -->

பாதுகாப்பு நிலைமைகள் குறித்து ஆராய பாதுகாப்பு செயலாளர் யாழ் விஜயம்

ஜூன் 17, 2020

 

வடக்கில் தற்போதைய  பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பாதுகாப்பு படையிரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகள் தெடர்பில் ஆராய பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன யாழிற்கான விஜயம் ஒன்றினை இன்றைய தினம் மேற்கொண்டார்.

கோவிட் -19 பரலைத் தடுக்கும் தேசிய மையத்தின் தலைவரும் பாதுகாப்பு அதிகாரிகாரிகளின் பதில் பிரதம அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா,விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ், பதில் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் தளபதிகள், பிரிவுகளின் கட்டளைத்தளபதிகள், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர், வட பிராந்தியத்திற்கு பொறுப்பான பொலிஸ் மா அதிபர், மேலும் சில அதிகாரிகள் உள்ளிட்ட உயர் மட்ட பாதுகாப்பு அதிதிகள், பாதுகாப்புச் செயலாளருடன் யாழ்ப்பாணத்திற்கான  விஜயத்தில் இணைந்து கொண்டனர்.

கொழும்பிலிருந்து விமானத்தின் மூலம் பலாலி விமான நிலையத்தை சென்றடைந்த பாதுகாப்புச் செயலாளர் தலைமையிலான  உயர்மட்ட தூதுக்குழுவை யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய வரவேற்றார்.

இந்த விஜயத்தின் போது, யாழ் மாவட்டத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை, கொரோனா வைரஸ் பரவல், போதைப்பொருள் பாவனை மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை தடுத்தல், சுகாதார அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பளிப்பதில் பாதுகாப்புபடையினரின் பங்கு, தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்தான களநிலவரம் என்பன தொடர்பாக முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகளினால் பாதுகாப்புச் செயலாளருக்கு விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கைப் பேண பாதுகாப்பினை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேஜர் ஜெனரல் குணரத்ன முப்படை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தினார்.