--> -->

71 இராணுவ அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

ஜூன் 20, 2020

இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த 71 இராணுவ அதிகாரிகளுக்கு இம்மாதம் 15ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய 41 கேர்ணல் தர அதிகாரிகள் பிரிகேடியராகவும் 30 லெப்டினன்ட் கேர்ணல் தர அதிகாரிகள் கேர்ணல்களாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.