--> -->

போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய மூவர் கைது

ஜூன் 24, 2020

தெஹிவளை, முகத்துவாரம் மற்றும் முல்லேரியா பகுதிகளில் வெவ்வேறாக மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பின்போது  தம்வசம் போதைப்பொருள் வைத்திருந்ததன்பேரில்   மூன்று சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை பொலிசாருக்கு கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய 10 கிராம் ஹெரோயின் போதைபொருள் தம்மிடம் வைத்திருந்த 29 வயது சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   தெஹிவளை வைத்திய வீதியில்  வசிக்கும் சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் முகத்துவார பொலிஸாரினால் 2.87  கிராம் ஹெரோயின் போதைபொருள் தம்வசம் வைத்திருந்த 34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் “ரன்திய உயன” வீட்டுத்திட்ட பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபர் வீரப்பொக்குன கரந்தன கம பகுதியில் வசிப்பவர் என  தெரிவிக்கப்படுகிறது.  

இதேவேளை, கடுவளை வெளிவிட்ட பகுதியில் 2.55 கிராம் ஹெரோயின் போதைபொருள் தம்வசம் வைத்திருந்த 25 வயதுடைய சந்தேகநபர் ஒருவரை முல்லேரியாவ பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.