--> -->

இராணுவத்தினரால் தேவையுடைய குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிப்பு

ஜூன் 24, 2020

யாழ் பாதுகாப்பு படையினரால் நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு வீடு கோப்பாய் பிரதேசத்தில் வசிக்கும் தேவையுடைய குடும்பத்திடம் நேற்றையதினம் (ஜூன்,23) கையளிக்கப்பட்டது.

யாழில்  இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதாபிமான உதவியின் ஒருபகுதியாக  கோப்பாய் பிரதேசத்தில் வசிக்கும்  வசிக்கும் யோகேந்திரன் யோகி என்பவருக்காக நிர்மாணிக்கப்பட்ட இந்த வீட்டிற்கான நிதியுதவி , தியாஹி அறக்கட்டளையின் ஸ்தாபகரும் தலைவருமான  வாமதேவ தியாகேந்திரன் எனும் தனவந்தரினால் அளிக்கக்கப்பட்டது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீடு,  யாழ் பாதுகாப்பு படைத்தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய மற்றும் தியாஹி அறக்கட்டளையின் ஸ்தாபகரும் தலைவருமான  வாமதேவ தியாகேந்திரன் ஆகியோரினால் பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.