--> -->

ஊரடங்கு சட்டம் இன்று முதல் நீக்கம்

ஜூன் 28, 2020

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டம் இன்று (ஜூன், 28) முதல் அமுலுக்கு வரும் வகையில் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மார்ச் 20 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் வைரஸால் பாதிப்பு ஏற்பட்ட சூழ்நிலைகள் மற்றும் பகுதிகளைப் பொறுத்து அவ்வப்போது மாற்றம் செய்யப்பட்டது. இறுதியாக, ஊரடங்கு காலம் நான்கு மணி நேரமாகக் குறைக்கப்பட்டது. இது வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நள்ளிரவு 12.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 4.00 மணி வரை அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.