--> -->

போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டவர் பரித்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்

ஜூலை 03, 2020

இரண்டு கிலோ கிராம் ஐய்ஸ் போதைபோருளுடன் கைது செய்யப்பட போதைப்பொருள் வியாபாரி ஒருவர் சட்ட நடவடடிக்கைகளுக்காக பரித்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 02) ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பரித்துத்துறை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின்போது வல்வெட்டித்துறையை வசிப்பிடமாக கொண்ட 66 வயதுடைய குறித்த சந்தேக நபர் வாகனம் ஒன்றில் ஒரு தொகை போதைபொருள் கொண்டுசெல்லும் போதே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

பரித்துத்துறை பொலிஸார் மேலதிகவிசாரனைகளை முன்னெடுத்து வருகின்றனர்.