--> -->

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான 'குடு அன்ஜு'வின் உதவியாளர் பொலிஸாரினால் கைது

ஆகஸ்ட் 02, 2020

பிரபல பாதாள உலககுற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான 'குடு அன்ஜு'வின் உதவியாளர் கொழும்பு பஞ்சிகாவத்தை பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்றைய தினம் கைதுசெய்யப்பட்டார்.   

பொலிஸின் கூற்றுப்படி, அசங்க என அறியப்படும் சித்தும் நிலங்க என்ற சந்தேக நபர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மீகொடவில் உள்ள அவரின் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது வெளிநாட்டு தயாரிப்பான ரிவால்வர் மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 20 துப்பாக்கி ரவைகள் என்பவற்றை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்தார்.    

அவர் அங்குலான பகுதியில் போதைப் பொருள் வினியோகிப்பவர் என சந்தேகிக்கப்படுவர் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.