--> -->

மிதக்கும் சேதக்கட்டுப்பாட்டு மாதிரி அமைப்பு கடற்படையினரால் அறிமுகம்

ஆகஸ்ட் 07, 2020

திருகோணமலை கடற்படைத் தளத்தில் பயிற்சி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக அதிவேக தாக்குதல் படகிற்கான சேதங்களை பழுது பார்க்கும் புதிய வடிவிலான சேதகட்டுப்பாட்டு தளம் ஒன்றினை இலங்கை கடற்படை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு கிழக்கு கடற்படை கட்டளையைகத்தில் கடந்த புதன்கிழமையன்று (ஆகஸ்ட், 05) இடம்பெற்றது.

சேதக் கட்டுப்பாடு,பாதிக்கப்பட்டோரை மீட்கும் பணி, தீயணைப்பு பயிற்சிகள் என்பன இந்த அங்குரார்ப்பண நிகழ்வு வினையை அடுத்து இடம் பெற்றன.

கடற்படையின் ஒருங்கிணைப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் உபாயத்திறன் ஆகியவற்றை பாதுகாக்க கடற்படையினருக்கு சேதக் கட்டுப்பாடு மற்றும் தீயணைப்பு தொடர்பான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

துல்லியமான சேதமடைந்த கட்டுப்பாட்டு திறனை பேணும் வகையில் யதார்த்தமான கடற்படை பயிற்சி மூலம் இந்த விடயம் சார்ந்த திறமைகளை வளர்த்தல் மற்றும் கடற்படை வீரர்களுக்கு உகந்த தயார்நிலையை உருவாக்குதல் என்பன அவசியமாகும்.

கடலில் மிதத்தல் மற்றும் நகர்தலை உறுதிப்படுத்தும் வகையில் படகுகளில் ஏற்படும் சேதங்களையும் விரைவாக சீர் செய்வது அவர்களின் இலக்குகளை அடைவதற்கு இன்றியமையாத ஒன்றாகும்.

இந்த நிகழ்வில் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா மற்றும் கிழக்குக் கடற்படை கட்டளையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.