--> -->

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 2,658 ஆக உயர்வு

ஆகஸ்ட் 15, 2020

கொரோனா வைரஸ் தொற்று குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து மேலும் 12 பேர் வீடுதிரும்பியதை அடுத்து குணமடைந்தோரின் மொத்த  எண்ணிக்கை இன்று (ஆகஸ்ட் 14) 2,658 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் புதிதாக அடையாளங்காணப்பட்டதையடுத்து தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை  2886 ஆக உயர்வடைந்துள்ளது.

ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகைதந்த  மூவரும்  மற்றும் ஜப்பான் நாட்டில் இருந்து வந்த ஒருவருமே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.