--> -->

இன்ஹேலர்களைப் பயன்படுத்தி போதைப்பொருள் மோசடி - பொலிஸார் பெற்றோருக்கு எச்சரிக்கை

ஆகஸ்ட் 16, 2020

அண்மையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் (இன்ஹேலர்களைப்) உட்சுவாசக்கருவிகளை  பயன்படுத்தி போதைப்பொருள் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன இன்று (16) தெரிவித்தார்.

போதைபொருள் வியாபாரிகள் சட்டவிரோத போதைபொருள் பாவனைக்காக இப்புதிய இன்ஹேலர் கருவியை பயன்படுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.  

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து குறித்த சாதனத்தை ஒவ்வொன்றும் 15,000 ரூபாய் பெறுமதியில் விற்பனை செய்துள்ளமை தொடர்பில் பெற்றோர்கள் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தலத்திற்கு  பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.   

இது தொடர்பில் அனைத்து பொதுமக்களும் விசேடமாக பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் விழிப்பாக இருப்பதுடன் அவை தொடர்பான தகவல்களையும் வழங்குமாறு பொலிஸ் பேச்சாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.   

பொலிஸார் அவ்வாறு தகவல்களை வழங்குவதற்காக புதிய இலக்கங்கலான 1997,1917 எனும் இரண்டு அவசர இலக்கங்களையும்,  தகவல்களை வழங்கும் வகையில்  1917@Police.lk எனும் மின்னஞ்சல் முகவரியையும் வழங்கியுள்ளனர்.    

முறைப்பாடுகளின் இரகசியத்தன்மை பாதுகாக்கப்படும் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.