--> -->

சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்பட்ட மஞ்சள் கடத்தல் நடவடிக்கை கடற்படையினரால் முறியடிப்பு

ஆகஸ்ட் 19, 2020
  • மொத்தம் 8,100 கிலோகிராம் மஞ்சள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டுள்ளது

சாக்குகளில் பொதிசெய்யப்பட்ட நிலையில் நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட ஒரு தொகை உலர்ந்த மஞ்சளினை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய மன்னார், வங்காலை மற்றும் நுரைச்சோலை, தலுவ கடற்கரை பிராந்தியங்களில் இடம்பெற்ற இருவேறு சம்பவங்களின் போது 14 சாக்கு பொதிகளில் பொதியிடப்பட்ட 807 கிலோகிராம் உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டன.

இந்த கடத்தல் நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24 முதல் 58 வயதுகளையுடைய சந்தேக நபர்கள், மேலதிக விசாரனைகளுக்காக சுங்க திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் உலர்ந்த மஞ்சளினை கொண்டுவர முயற்சிக்கப்பட்ட இரு சந்தர்ப்பங்களில் அவைகள் கடற் படையினரால் முறியடிக்கப்பட்டன. இந்த சம்பவங்களின் போது மன்னார் மேற்கு கடற்பரப்பில் ஜூலை 28ம் திகதி 1,000 கிலோகிராமும் ஆகஸ்ட் 11ம் திகதி 6,381 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டன.

நாட்டிற்குள் சட்டவிரோதமாக மஞ்சள் கொண்டு வருவதை தடுக்கும் வகையில் வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை கட்டளையங்கள் உஷார் நிலையில் உள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.