--> -->

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக உருவாக்கப்பட்ட ஜனாதிபதி செயலணிக்கு புதிதாக மேலும் நான்குபேர் நியமிப்பு

ஆகஸ்ட் 25, 2020

‘கிழக்கு மாகாணத்தில் காணப்படும் தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக உருவாக்கப்பட்ட 12 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணிக்கு புதிதாக மேலும் நான்குபேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக விஷேட வர்த்தமானி அறிவித்தல்  நேற்று (24) வெளியிடப்பட்டுள்ளது.

வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய வெண்டருவே தர்மகீர்த்தி ஸ்ரீ ரத்னபால உபாலி அபிதான தேரர், மல்வத்தை பீடத்தின் அநுநாயக தேரர் கலாநிதி சங்கைக்குரிய பஹமுனே சுமங்கள தேரர், அஸ்கிரிய பீடத்தின் அநுநாயக தேரர் சங்கைக்குரிய கலாநிதி சங்கைக்குரிய மெதகம தம்மானந்த தேரர், மல்வத்தை பீடத்தின் கரக சங்க சபை உறுப்பினர் சங்கைக்குரிய அம்பன்வெள்ள ஸ்ரீ சுமங்கள தேரர்  ஆகியோர் இச்செயலணியின் புதிய உறுப்பினர்களாக அங்கம் வகிக்கின்றனர்.

அரசியலமைப்பின் 33 வது பிரிவின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு அமைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின் கீழ் ஜூன் மாதம் இரண்டாம் திகதி தொல்பொருள் பிரதேசங்களை முகாமைத்துவம் செய்தல் தொடர்பாக குறித்த செயலணி உருவாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.