--> -->

கடல் காற்று கப்பலில் தீப்பிழம்புகளைத் தூண்டுகிறது - கடற்படை

செப்டம்பர் 08, 2020

எம்ரீ நியூ டயமண்ட கப்பலில் ஏற்பட்டுள்ள தீ கடலில் ஏற்பட்டுள்ள வானிலை மாற்றம் காரணமாக  அதிகரித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர கடற்படை, விமானப்படை, இந்திய கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படையின் கப்பல்களும் விமானங்களும் தொடர்ந்து போராடி வருகின்றன.

நிர்க்கதியான நிலையில் உள்ள இந்தக் கப்பலின் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ குழுக்களின் ஒத்துழைப்புகள் பெறப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பலில் ஏற்பட்ட தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்திய கடலோர பாதுகாப்புப் படையின் விமானங்கள் உலர் இரசாயன தீயணைப்பு பவுடர் கொண்டுவரப்படும் என எதிர்பார்ப்பதாக கடற்படைத் தகவல்கள் தெரிவித்துள்ளன.

கப்பலின் எண்ணெய் சேமிப்பகத்தில் அல்லது எண்ணெய் கசிவு ஆகியவற்றில் தீ பரவுவதற்கான ஆபத்து இல்லை என கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் இதனை உறுதி செய்ய தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவ நிறுவனம், கடல் சார்  சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை மற்றும் ருஹுனு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் ஆய்வு குழுக்கள் நீர் மாதிரிகள் மற்றும் கடல் சூழலை ஆய்வு செய்ய சம்பவ இடத்திற்கு வருவார்கள் என  எதிர்பார்க்கப்படுவதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.