--> -->

மன்னார் கடற்பரப்பினூடாக இடம்பெற்ற மஞ்சள் கடத்தல் முயற்சி கடற்படையினரால் முறியடிப்பு

செப்டம்பர் 17, 2020

மன்னார் வடக்கு கடற்பரப்பினூடாக  நாட்டுக்குள் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 818 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சளினை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இதற்கமைய  17 சாக்குப் பைகளில் பொதி செய்யப்பட்ட உலர் மஞ்சளினையும் அதனை நாட்டுக்குள் கொண்டு வர பயன்படுத்தப்பட்ட டிங்கி படகினையும் கடற் படையினர் கைப்பற்றினர்.

இந்த கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 26 தொடக்கம் 37 வயதுகளையுடைய சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட பின்னர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொதுச் சுகாதார பரிசோதகர் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கைப்பற்றப்பட்ட மஞ்சள் மற்றும் படகு என்பன மேலதிக விசாரணைகளுக்காக யாழ் சுங்கத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடமத்திய கடற்படைத் தலைமையகத்தினால் மேற்கொள்ளப்பட்ட இருவேறு தேடுதல் நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும்  மஞ்சளினை கடத்தும் இந்த கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டுக்கு சட்டவிரோதமாக உலர்ந்த மஞ்சளினை கொண்டு வருவதைத் தடுக்க வடமேற்கு மற்றும் வடமத்திய கடற்படை தலைமையகங்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை உறுதிப்படுத்தியுள்ளது.