--> -->

பூவெலிகடை மண்சரிவில் சிக்கியோரை இராணுவத்தினர் மீட்பு

செப்டம்பர் 20, 2020

இன்று காலை (செப்டம்பர், 20) கண்டி பூவெலிகடை பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவின் பின்னர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி காயமுற்ற மூவரை இராணுவத்தினர் மீட்டுள்ளனர்.

இப்பிரதேச மலைப்பகுதியில் ஐந்து மாடிக்கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் அதற்கு அருகாமையில் இருந்த வீடும் சேதமாகியுள்ளதுடன்,  அவ்வீட்டில் இருந்தவர்கள் அத்தகுள் அகப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை ஒன்று கண்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபின்னர் மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் கண்டி பூவெலிகடையில் ஏற்பட்ட இம் மண்சரிவில் மேலும் சிலர் உயிருடன் புதையுண்டதாகவும் தகவல்கள் மேலும் உறுதிப்படுத்தியுள்ளன, கண்டி பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்தும் பெய்துவரும்  மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக மலைப்பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டகூடிய அபாயம் இருப்பதாக  தெரிவிக்கப்படுகிறது.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவில் உள்ள 2 இலங்கை இராணுவ சிங்க படையணி, 10 ஆவது கஜபா படையணி மற்றும் இலங்கை ரைபில் படைபிரிவினர் குறித்த இடிபாடுகளுக்கு இடையில் சிக்குண்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக இராணுவத்தகவல்கள் தெரிவிக்கின்றன.