--> -->

அங்கவீனமுற்ற போர் வீரர்களின் செயற்கை கால்களை திருத்தும் பணிகள் இராணுவத்தினால் ஆரம்பம்

செப்டம்பர் 21, 2020

அங்கவீனமுற்ற போர் வீரர்களின் செயற்கை கை, கால்களை திருத்தியமைக்கவும்  மற்றும் பழுதுபார்க்கவும் இரண்டு சிறிய செயற்கை அவையவங்கள் பிரிவு அண்மையில் நிறுவப்பட்டுள்ளது.

காலியிலுள்ள ‘செனசுமா’ அல்லது ராகம ரணவிரு செவன போன்ற தூர இடங்களுக்கு செல்வதை தடுத்து அனுராதபுரம் மற்றும் குருணாகல் மாவட்டங்களில் அதிகம் வசிக்கும் அங்கவீனமுற்ற போர் வீரர்களின் வசதிகருதி குறித்த இரண்டு பழுதுபார்க்கும்  பிரிவுகள்  நிறுவப்பட்டுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் ஆலோசனைகளுக்கு ஏற்ப அனுராதபுரத்தின் ‘அபிமன்சல -1’ மற்றும் பங்கொல்லவின் ‘அபிமன்சல -3’ ஆகிய இரண்டு பிரிவுகளும் அதன் தளபதிகளால் நிறுவப்பட்டுள்ளன.

குறித்த இரு பிரிவுகளிலும் ஆரம்ப நாளன்று அனுராதபுரம், குருணாகல், புத்தளம், கண்டி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வசிக்கும் 12 அங்கவீனமுற்ற போர்வீரர்கள் அதன் சேவைகளை பெற்றுக்கொண்டனர்.

இவ் இருபிரிவுகளும் நாட்டின் அனைத்து பாகமும் உள்ள அங்கவீனமுற்ற போர்வீரர்களுக்காக திறந்திருக்கும்.

இப்பிரிவுகளை திறந்து வைக்கும் நிகழ்வில், அனுராதபுரத்தில் அமைந்துள்ள அபிமன்சல-1 மையத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் துசித்த ஹெட்டியாராச்சி மற்றும் அபிமன்சல -3 மையத்தின் கட்டளை தளபதி கேர்ணல் அருண விஜயகுணவர்தன உட்பட பல்வேறு  நிருவாக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.