--> -->

இராணுவத்தினரால் 49 செயற்கை கால்கள் திருகோணமலை சிவிலியன்களுக்கு அன்பளிப்பு

செப்டம்பர் 29, 2020

இலங்கை இராணுவத்தின்  221 படைப்பிரிவினால் திருகோணமலை மாவட்டத்தில் தேவையுடைய பொதுமக்களுக்கு 49 செயற்கை கால்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது. அண்மையில் திருகோணமலை நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வின் போதே இவ்வாறு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.    

 221 படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர். பிரியந்த காரியவசம் அவர்களின் ஒருங்கிணைப்புடன் மேற்கொள்ளப்பட்ட குறித்த மனிதாபிமான நலன்புரி சேவைகளுக்கு   கொழும்பு சிட்டி, ரோட்டரி கழகம், கொழும்பு நட்புறவு சங்கம் ஆகியன ஒன்றினைந்து அனுசரணை வழங்கியுள்ளன.  

விலையுயர்ந்த செயற்கை உறுப்புகளை கொள்வனவு செய்ய முடியாத குறித்த பயனாளிகள் பிறவிக் குறைபாடுகள் மற்றும் அங்கவீனமுற்ற பொதுமக்கள் எனவும் தெரிவக்கப்படுகிறது.
 
கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) இடம்பெற்ற இந்நிகழ்வில் கொழும்பு சிட்டி, ரோட்டரி கழகம், கொழும்பு நட்புறவு சங்கம், அனுசரணையாளர்கள், திருகோணமலை நகராதிபதி, 221 படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர். பிரியந்த காரியவசம், 223  படைப்பிரிவின் கட்டளை தளபதி பிரிகேடியர். சாந்த பெரேரா, அதிகாரிகள் மற்றும் 22 படைப்பிரிவின் பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.